தமிழக போலீஸை கடனாளியாக்கிய காவல் துறை !

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டிகொண்டு பொதுமக்கள் எந்த உதவியாக இருந்தாலும் தொடர்பு கொள்ளலாம் என அடிக்கடி அறிவிப்பு வெளியிடுவதை அணைவரும் அறிந்ததே.

இந்த நிலையில் காவல் துறையில் சென்னையில் பணியாற்றும் காவலர் மதன்குமார் என்பவர் அவரது மனைவி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

அந்த காவலர் அவரது மனைவியை காப்பாற்ற அவசர மருத்துவ சிகிச்சைக்காக அவருக்கு உடனடியாக வழங்க வேண்டிய நல வாரிய நிதியை கேட்டு விண்ணப்பித்து இருந்ததாக சொல்லப்படுகிறது.

ஆனால் காவல் துறையில் பணியாற்றும் உயர்அதிகாரிகளின் மெத்தன செயல்ப்பட்டால் காவலருக்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்காததால் அவர் கடன் வாங்கி அவரது மனைவியை காப்பாற்றியதாக ஒரு தகவல் வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவருகிறது.

வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் தெரிவித்துள்ளதாவது :-

மனிததன்மை இன்றி பணியாற்றி தமிழக காவல் துறைக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் அதிகாரிகள்

காக்கும் காவல்துறைக்கே கலக்கமா?.

ஊரிலுள்ளோருக்கு பிரச்னை என்றால் காவல்துறைக்கு போவோம்… அந்த காவல்துறையினருக்கே ஒரு பிரச்னை என்றால் யாரிடம் போவது?.

சென்னை மாநகர காவல் கட்டுபாட்டில் உள்ள திருமங்கலம் வி5 காவல் நிலையத்தில் காவலராகப் மதன்குமார் என்பவர் பணியாற்றி வருகிறாராம்.

கடுமையான டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரது மனைவியை சிறுநீரக செயல் இழந்து கோமா நிலையில் வானகரத்தில் உள்ளஅப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 8.11.2015 அன்று அட்மிட் செய்துள்ளாராம்.

இந்த நிலையில் 20.11.2015 அன்று பத்து இலட்சம் கட்ட வேண்டும் என்று பில்வந்ததும் கலங்கிப் போனவர் காவலர்துறையில் இயங்கும் நல வாரியத்தையும், மருத்துவக் காப்பீடு நிறுவனத்தையும் அணுகியுள்ளார்.

நல வாரிய பெண் அதிகாரி அனைத்து பேப்பர்ளையும் வாங்கி வைத்துக்கொண்டு காப்பீட்டு நிறுவனத்தில் தடையின்மைச் சான்றிதழ் வாங்கி வருமாறு கூறியுள்ளார்.

அவர்களோ டிஸ்சார்ஜ் ஆகாமல் சான்றிதழ் தர மறுத்து விட்டபடியால், மீண்டும் நல வாரிய அலுவலரிடம் வந்தாராம். அவர் ஏடிஜிபியிடம் அழைத்து சென்றுள்ளார்.

நிலைமையைப் புரிந்துகொண்ட அவர் உடனே மேலொப்பமிட்டு, தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி ஆவன செய்யுமாறு கூறியுள்ளார்.

ஆனால், மீண்டும் 27.11.2015 அன்று அழைத்த அந்த பெண் அதிகாரி, தனது உதவியாளரிடம் பேசுமாறு கூறியுள்ளார். அவரோ, திங்கட்கிழமை 30.11.2015 அன்றுதான் கடிதத்தை தட்டச்சு செய்ய முடியும்.

அதற்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி விட்டாராம். செய்வதறியாமல் தவித்த இவர் காப்பீடு நிறுவனத்திலிருந்து கிடைத்த ரூ. லட்சம் போக மீதமுள்ள தொகைக்காக உறவினர்கள், நண்பர்ள் அனைவரிடமும் மன்றாடி பணத்தைப் புரட்டி 28.11.2015 அன்று மருத்துவமனையில் கட்டி, மனைவியை டிஸ்சார்ஜ் செய்து விட்டு இப்போது தவிக்கிறாராம்.

இதைத்தான் “சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்கவில்லை” எனச் சொல்வார்களோ?

என்று வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறை உங்களின் நண்பன் என மார்தட்டி கொண்டுள்ளவர்கள் காவல் துறையில் பணியாற்றும் காவலர் குடும்பத்தின் அவசர மருத்துவ சிகிச்சைக்கு கூட உடனடியாக உதவாததை என்னவெண்பது .?

 

Donate to Dhinasari News! Independent journalism that speaks truth to power and is free of corporate and political control is possible only when people start contributing towards the same. Please consider donating towards this endeavour to fight fake news and misinformation.