நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில் நடந்த கலவர விவகாரத்தில் 6 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இஸ்லாமியர்கள் தரப்பில் இருந்து தென்காசி முகம்மது, வடகரை அப்துல் பாஸிக், அச்சன்புதூர் நாகூர் கனி ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்ய பட்டுள்ளனர். இவர்கள் மூவருமே செங்கோட்டைக்கு அருகில் உள்ள ஊர்களைச் சேர்ந்த வெளியூர் நபர்கள் …
அதுபோல் இந்துக்கள் தரப்பில் இருந்து செங்கோட்டையைச் சார்ந்த சுபாஸ் என்ற சுடலை, மாரிசெல்வம், காளிபிரகாஷ் ஆகிய மூவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டுள்ளனர்.




