
சென்னை: சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ., மைதானத்தில் இன்று மாலை 4 மணி அளவில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா துவங்குகிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக, தென் மாவட்டங்களில் இருந்து ஏராளமான வாகனங்களில் தொண்டர்கள் அழைத்துச் செல்லப் பட்டுள்ளனர்.
இதனால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டை, பாபநாசம், நெல்லை, குமரி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து சென்ற பேருந்துகள் அச்சிரப்பாக்கம், மேல் மருவத்தூர் பகுதிகளில் கடும் நெரிசலில் சிக்கின. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர்.
வாகனங்கள் ஆங்காங்கே சாலைகளில் நிறுத்தப் பட்டு உணவகங்களுக்கும் சாலையோர இயற்கை உபாதைகளுக்குமாக நிறுத்திவிட்டு செல்வதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, சுமார் 3 மணி நேர தாமதத்தில் பேருந்துகள் செல்கின்றன.



