நாகர்கோவில்: இந்துக் கடவுள்களை சாத்தான்கள் என்று கூறி மோகன் சி லாசரஸ் பேசிய பேச்சுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. மதக் கலவரத்தைத் தூண்டும் வகையிலும், இந்து – கிறிஸ்துவ மத மோதலை ஏற்படுத்தும் வகையிலும், ஒரு மதத்தையும், மதக் கடவுள்களையும் அவதூறாகப் பேசிய கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி.லாசரஸ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பலவேறு தரப்பினரும் புகார்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இது குறித்து தமிழக முதல்வருக்கு இந்து முன்னணி (மிசா சி சோமன், தலைவர், குமரி மாவட்டம்) சார்பில் எழுதப் பட்டுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது…
நான் கன்னியாகுமரி மாவட்ட இந்து முன்னணி மாவட்டத் தலைவராக இருந்து தேசப் பணி செய்து வருகிறேன்.
சமூக வலைதளங்களில் JESUS REDEEMS என்ற கிறிஸ்தவ அமைப்பை நடத்திவரும் மோகன் C லாசரஸ் என்கிற கிருஸ்தவ மதபோதகர் சமீபத்தில் நடைபெற்ற ஒரு கிருஸ்தவ நிகழ்ச்சியில் ஹிந்து கடவுள்களை சாத்தான்கள் என்றும் ஹிந்து ஆலயங்களை சாத்தான்களின் அரண்கள் என்றும், இந்தியாவிலேயே அதிகமாக சாத்தான்களின் அரண்கள் உள்ள இடம் தமிழகம் என்றும், குறிப்பாக கும்பகோணம் பகுதியில் அத்தனை கோவில்களிலும் சாத்தான் அதிகமாக இருப்பதாகவும், ஹிந்துக்களின் வழிபாட்டு முறைகளான யாகங்கள் வேள்விகளை கேலிசெய்யும் விதமாகவும் பேசியுள்ளார்.
மேலும் இவரது அமைப்பு மூலம் இவர் நடத்தும் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து ஹிந்து கடவுள்களையும் ஹிந்து மத நம்பிக்கைகளையும் இழிவாக பேசி வருகிறார். இவரது இந்த செயல் பெரும்பான்மை சமுதாயமான ஹிந்துக்களின் மனம் புண்படும் வகையில் உள்ளது.
ஹிந்து மத நம்பிக்கைகளுக்கு எதிராக பேசி மதக் கலவரத்தை தூண்ட முயற்சி செய்யும் இவரது அமைப்பை தடை செய்வதோடு தொடர்ந்து ஹிந்து மத துவேசத்தில் ஈடுபடும் இவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் sec 295A – மத உணர்வுகளை புண்படுத்துதல், மதத்தின் பெயரால் பிற மதத்தினரை நிந்தித்தல், மத உணர்வுகளை அவமதித்தல் பற்றி இந்திய தண்டனைச் சட்டம் sec 295A – 298 போன்ற சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டு கொள்ளுகிறேன்..
– என்று குறிப்பிட்டுள்ளார்.





இவரை இதà¯à®µà®°à¯ˆ கைத௠செயà¯à®¯à®¾à®®à®²à¯ இரà¯à®ªà¯à®ªà®¤à¯ தமிழக அரசà¯à®•à¯à®•௠இஷà¯à®Ÿà®®à®¿à®²à¯à®²à¯ˆà®¯à®¾ ? அலà¯à®²à®¤à¯ கிறிஸà¯à®¤à¯à®µ தரà¯à®®à®®à®¾? இதà¯à®¤à®¾à®©à¯ தமிழà¯à®¨à®¾à®Ÿà¯à®Ÿà¯à®•à¯à®•à¯, இஙà¯à®•௠வாழà¯à®®à¯ ஹிநà¯à®¤à¯à®•à¯à®•ளà¯à®•à¯à®•௠அரச௠கொடà¯à®•à¯à®•à¯à®®à¯ பாதà¯à®•ாபà¯à®ªà®¾ ?