தமிழகத்தில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படாது : மத்திய அமைச்சர் நிதின் கத்கரி

 வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.

 தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் பெய்து வரும் தொடர் கனமழையால் சென்னை மாநகரில் தாம்பரம்,  பெருங் களத்தூர், முடிச்சூர், திருநீர்மலை, திருமுடிவாக்கம் உள்ளிட்ட பகுதிகள் வரலாறு காணாத மழை யால்  கடுமையாக பாதிக்கப் பட்டுள்ளன.  50 ஆயிரத் துக்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து நிற்கிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட வெள்ளத்தை விட பலமடங்கு தண்ணீர் வீடுகளில் புகுந்தது. இதனால் பலவீடுகளில் முதல் மாடி வரை தண்ணீரில்  முழ்கியது.  மீட்பு பணியில்  தீயணைப்பு வீரர்கள்,  தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல்படை ஆகியோர் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுடன் மீனவர்களும் மீட்பு பணியில் இறங்கி உள்ளனர்.

 வெள்ளத்தில் சிக்கி தவித்தவர்களை படகுகள் மூலம் மீட்பு பணி நடந்து வருகிறது. மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்களுக்கு ஹெலிகாபடர் மூலம் உணவு விநியோகம் செய்யபடுகிறது.

 வெள்ளத்தில் சிக்கிய சென்னைவாசிகளுக்கு உதவி செய்ய, அவர்களை மீட்க, நேற்று ராணுவத்திற்கு அழைப்புவிடுக்கப்பட்டது. கப்பலில், மீட்பு பணிக்கு தேவையான பொருட்களுடன், இன்று காலை கடற்படையினர் சென்னை துறைமுகத்திற்கு வந்தனர். விமானப்படை சார்பில் 5க்கும் மேற்பட்ட ஹெலிகாப்டர்கள் வரவழைக்கப்பட்டது. இதில், இன்று, 2 ஹெலிகாப்டர்கள் மூலம், நகரின் பல பகுதிகளில் ஆய்வு செய்து, எங்கு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்களோ, அங்கு உணவு பொட்டலங்களை வீசி வருகின்றனர்.

 மேலும் வெள்ளத்தில் சிக்கியவர்களுக்கு  பல்வேறு தன்னார்வ தொண்டு அமைப்புகள் வெளி மாவட்டங்களில்  இருந்தும்  உணவு மற்றும் தேவையான அத்தியாவசிய பொருட்களை சாலைமார்கமாக கொண்டு சென்று இலவசமாக  வழங்கி வருகின்றனர்.

 இந்த நிலையில் வெள்ளப்பாதிப்பினால் தமிழகத்தில் டிசம்பர் 11 ஆம் தேதி வரை சுங்க கட்டணம் அனைத்து வாகனங்களுக்கும் வசூலிக்கப்படாது என  கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத்துறை மத்திய அமைச்சர் நிதின் கத்கரி தெரிவித்துள்ளார்.