சென்னை: தாமிரபரணி புஷ்கரத்தை முன்னிட்டு, விஷ்வ ஹிந்து பரிஷத், ஒரு விழிப்பு உணர்வு ரத யாத்திரையை நடத்துகிறது.
வரும் அக்.8 ஆம் தேதி சென்னையிலிருந்து புறப்படுகிறது தாமிரபரணி புஷ்கர பிரதான ரதம். அக். 8 ஆம் தேதி காலை 9 மணிக்கு ரதம் புறப்படும் இந்த நிகழ்வின் போது, பல்வேறு முக்கிய ஆன்மீக அரசியல் பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.
ரதயாத்திரை திருவொற்றியூர் வடிவுடை அம்மன் ஆலயத்தில் துவங்கி புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் ஆலயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி ஆலயம் சைதாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயம் ஆகியவற்றைக் கடந்து தாம்பரம் சென்றடையும்.
மறுநாள் காலை 8 மணிக்கு தாம்பரத்தில் இருந்து பெருங்களத்தூர் வண்டலூர் ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, காட்டாங்குளத்தூர், மறைமலைநகர், செங்கல்பட்டு மாமண்டூர், படாளம், கருங்குழி, மதுராந்தகம் வழியாக மேல்மருவத்தூரை சென்றடையும்.
ரத யாத்திரையுடன் சென்று புஷ்கரத்தில் சேவை புரிய விரும்புவோர் மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் நடைபெற உள்ள பல்வேறு சேவைப் பணிகளுக்கு உதவ விரும்புவோர் தொடர்பு கொள்ள
சு.வெ.ராமன் விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணை அமைப்புச் செயலாளர் . 7373870696 / 7904179287.





à®…à®°à¯à®®à¯ˆ….