ஜெயலலிதாவின் படம் எவரேனும் ஓட்ட வலியுறுத்தினால் காவல்துறையில் புகார் கொடுங்க : அதிமுக

 
 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படம் எவரேனும் ஓட்ட வலியுறுத்தினால் காவல்துறையில் புகார் கொடுக்க கூறி அதிமுகவின் முகனூல் பக்கத்தில் கூறப்பட்டுள்ளது.
 
மேலும் அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது :-
 
நிவாரணப் பொருட்களில் முதல்வர் ஜெயலலிதாவின் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டுமாறு யாருக்கும் அறிவுறுத்தவில்லை.தனியார்கள் வழங்கும் வெள்ள நிவாரணப் பொருட்களில் கூட தமிழ்நாடு முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கப்படுவதாக சில வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.
 
 
மாண்புமிகு அம்மாவிடமிருந்தோ அல்லது தலைமைக் கழகத்திலிருந்தோ அப்படிப்பட்ட எந்த அறிவுறுத்தலும் கொடுக்கப்படவில்லை.அது முதலமைச்சரின் ஆணையோ அரசின் ஆணையோ அல்ல. உண்மை நிலவரம் இப்படியிருக்க, சில தனிநபர்களின் இச்செயலை அதிமுக அரசோடு தொடர்புபடுத்தி ஊதிப்பெருக்கும் முதிர்ச்சியற்ற விளம்பரவாத அரசியலில் எதிர்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
 
இதுபோன்ற அரசியல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பின் வரும் அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது :
 
தனியார் உதவிகளில் முதலமைச்சரின் புகைப்படத்தை ஒட்ட வேண்டும் என்று எவரேனும் வலியுறுத்தினால் அதை மறுக்கவும். தேவைப்பட்டால் அருகில் உள்ள காவல்துறையில் புகார் அளிக்கவும் அறிவுத்தப்பட்டுள்ளது. அல்லது பின் வரும் எண்களிலும், மின்னஞ்சலுக்கும் புகார்களை தெரிவிக்கலாம்.
 
Ph: 91-44-28130787, 28132266, 28133510 or [email protected]
 
சம்பந்தப்பட்டவர்களின் புகைப்படம் மற்றும் தொலைபேசி எண்களை அதிமுகவின் அதிகாரப்பூர்வ முகப்பத்தகத் தளத்திலும் தெரிவிக்கலாம் என அதிமுகவின் முகனூல் பக்க பதிவில் கூறப்பட்டுள்ளது.