நடிகர் ரஜினிகாந்த் ரூ.10 கோடி மழைவெள்ள நிவாரண நிதியாக ஜெயலலிதாவிடம் வழங்கினார் ?

 
சென்னை உட்பட தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் மழைவெள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து இடங்களிலும் அதிகபட்ச உடனடியாக உதவி செய்ய ஜாதி, மத, வேறுபாடுகள் இன்றி பொது நல நோக்கத்தில் தமிழக பொது மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்புகள் முன்வந்துள்ளன.
 
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் நிவாரண நிதியாக ரூ.10கோடி வழங்கியுள்ளதாக புகைப்படத்துடன் பொய்யான தகவல் ஒன்றை எவரோ கூறி வாட்ஸ்ஆப்பில் பரப்பியுள்ளனர். மேலும் ரஜினிகாந்த் ஜெயலலிதாவிடம் நிதி அளிப்பது போன்ற புகைப்படம் போட்டோ ஷாப் மூலம் பழையபடத்தை வெட்டி ஒட்டப்பட்ட புகைப்படம் ஆகும் .
 
வாட்ஸ்ஆப்பில் வைரலாக பரவிவரும் அந்த செய்தியில் கூறியுள்ளதாவது :-.
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
# பத்து_கோடிரூபாய் நிவாரண நிதியை
முதல்வரிடம் வழங்கினார் !
அதுமட்டுமல்ல மருத்துவமனையில்
பிரசவம் ஆனா அனைவரது செலவையும்
தானே ஏற்றுக்கொள்வதாகஅறிவித்தார் !
எல்லோருக்கும் ஒரு படி மேலே ! என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
 
நடிகர் ரஜினிகாந்த் தற்பொழுது எந்திரன்- 2 திரைப்பட விசயமாக அமெரிக்கா சென்று இருப்பது குறிப்பிடதக்கது.