சென்னை: கனமழை காரணமாக, திருவாரூர், புதுகை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப் பட்டது.
திருவாரூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை பள்ளிகளுக்கு விடுமுறை என்றாலும் ஆசிரியர்கள் பணிக்கு வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் நிர்மல் ராஜ் அறிவித்துள்ளார்.
தொடர் மழை எதிரொலியாக கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது பற்றி தலைமை ஆசிரியர் முடிவு செய்யலாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் தொடர் மழை காரணமாக இன்று விடுமுறை விடுப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.




