இந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக மதபோதகர் மோகன் சி.லாசரஸ் மீது கோவை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் என மொத்தம் 17 காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது.
இதையடுத்து மத போதகர் மோகன் சி. லாசரஸை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இந்து ஆலயங்களை சாத்தான்களின் வசிப்பிடம் என்றும், இந்து தெய்வங்களை சாத்தான்கள் என்றும் கூறிய கிறிஸ்துவ மத போதகர் மோகன் சி லாசரஸ் மீது நேற்று ஒரே நாளில் 11 காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. மொத்தம் 17 காவல் நிலையங்களில் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், தனது பேச்சு குறித்து விளக்கம் அளித்து ஒரு வீடியோ பதிவு செய்துள்ளார் மோகன் சி லாசரஸ்.




