என்னமா சொல்லுறீங்க? பீப்…. பீப்…. பாடலுக்கு இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டுமா ? 

 

தற்போது சர்சையை கிளப்பியுள்ள சிம்பு, அனிருத்தின் “பீப் சாங்” குறித்து சென்னையில், கல்லூரி விழா ஒன்றில் கலந்துகொண்ட இளையராஜாவிடம், தனியார் தொலைக்காட்சியின் செய்தியாளர் ஆனந்த் நேற்று கருத்து கேட்டுள்ளார்

இசையமைப்பாளர் இளையராஜா அறிவு இருக்கா ? என அநாகரீகமான வார்த்தையை பயன்படுத்தி செய்தியாளரை தரக்குறைவாக பேசி வாக்குவாதம் செய்ததால் அதற்கு ஊடகவியலாளர்கள் சங்கங்கள் பல கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன் வாட்ஸ் ஆப்மூலம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த கண்டன அறிக்கையின் முடிவில் பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவர் அன்பழகன், சிம்பு, அனிருத், “பீப் சாங்” பாடல் பெண்களை மிக கேவலமாக சித்தரித்துள்ளதற்கு இசையமைப்பாளர் இளையராஜா வருத்தம் தெரிவிக்க வேண்டும். அதற்கு மாறாக கேள்வி கேட்ட நிருபரை தரக்குறைவாக பேசியது இளையராஜாவின் உண்மையான முகத்திரை கிழிந்து உண்மையான சொரூபம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இளையராஜாவின் பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான செயல்பாடுகளை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் சங்கம் விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்துள்ளது என அன்பழகன் கூறியுள்ளார்.

 

 

கண்டன அறிக்கையின் முடிவில் அன்பழகன் கூறி வெளியிட்டுள்ள மேற்சொன்ன தகவல்கள் மட்டும் அறிக்கையில் சிவப்பு மையினால் வட்டமிடப்பட்டு அந்த அறிக்கை வாட்ஸ் ஆப்பில் வைரலாக பரவிவருகிறது .