ஜல்லிக்கட்டு நடத்த உரிய நடவடிக்கை : மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்

 
 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என மத்திய மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 
மேலும் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
 
சென்னையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வீடுகளில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர்களும் அடித்து செல்லப்பட்டு உள்ளது. அவர்களுக்கு மீண்டும் சிலிண்டர் வழங்க பெட்ரோலியத்துறைக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது. சமையல் கியாஸ் சிலிண்டர்கள் இல்லாதவர்களுக்கு விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
 
ஜல்லிக்கட்டு தமிழகத்தின் வீரவிளையாட்டு. தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறது. இது பற்றி அத்துறை அமைச்சகத்துக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து உள்ளது.
 
அதன் அடிப்படையில் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த எல்லா பணிகளும் நடப்பதாக அவர்கள் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவற்றை சரி செய்து தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு விளையாட்டை நடத்த மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். மத்திய அரசு மட்டுமின்றி அனைத்து கட்சிகளும் இதற்கு ஆதரவு கொடுத்து முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததார்