முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு

சென்னை: முதலீட்டாளர் மாநாட்டில் இஸ்ரேல் பங்கேற்க முதல்வர் அழைப்பு விடுத்தர். நாட்டின் பாதுகாப்பு விஷயத்தில் இந்தியாவுடன் கைகோத்து நிற்பதாக இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன் கூறினார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் டேனியல் கார்மோன், பெங்களூரில் உள்ள துணைத் தூதரக அதிகாரி மெனஹெம் கனாபி, துணை அதிகாரி ஜிவ் ஷால்வி ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது…. முதலீடு செய்வதற்கு ஏற்ற சூழ்நிலை தமிழகத்தில் உள்ளது. பொருளாதார அளவில் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் சென்னையில் உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை வரும் மே 23,24–ந் தேதிகளில் தமிழக அரசு நடத்துகிறது. இதில் இஸ்ரேல் தொழிலதிபர்கள் பங்கேற்க வேண்டும் என்று முதல்–அமைச்சர் அழைப்பு விடுத்தார். இதற்கு பின்னர் பேசிய டேனியல் கார்மோன், தென் மாநிலங்களின் உறவுகளை வலுப்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இஸ்ரேல் தொழில்நுட்பத்துடன் இயங்கும் நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தை பார்வையிட்டேன். சுற்றுலா வளர்ச்சிக்காக இந்தியா–இஸ்ரேலுக்கும் இடையே நேரடி விமானப் போக்குவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ap_meet
சென்னை தலைமைச் செயலகத்தில் இஸ்ரேல் தூதர் எச்.இ.டேனியல் கார்மன் உள்ளிட்ட பிரதிநிதிகளுடன் வர்த்தக-தொழில் உறவுகள் குறித்து விவாதித்த முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்…