ஜப்பான் நாட்டின் ஃபுகோகோ (Fukuoka) நகரத்தில் ரிலே மாரத்தான் போட்டிகள் நடைபெற்றது. 26 மைல்கள் கொண்ட இந்த போட்டியில் பங்கேற்ற ரெய் லிடா (Rei Iida) என்ற 19 வயது மாணவிக்கு ஓடும் போது வலது காலில் முறிவு ஏற்பட்டது. இதனால் அந்த வீராங்கனை தவழ்ந்து கொண்டே சென்று 700 அடிகளை கடந்தார். ரத்தம் வழிய தனது கையில் இருந்த வளையத்தை மற்ற வீராங்கனையிடம் ஒப்படைத்தார். இது தொடர்பான வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Popular Categories




