மணல் கடத்தல் கும்பலுடன் தொடர்புடைய காவலர் கைது! சிறையில் அடைப்பு!

சற்றுமுன் நெல்லை

senkottai vinayakar chaturti issue1a - 2026

நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளர் ராணியின் ஓட்டுநராக பணியாற்றி வருபவர் காவலர் சிவா.

திசையன்விளை பகுதியில் கடந்த சில மாதங்களாக நம்பியாற்றில் மணல் திருடப்பட்டு வருவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இது சம்பந்தமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு திசையன்விளையைச் சேர்ந்த சின்னத்துரை என்பவர் மணல் கடத்தலில் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடத்தியதில் காவல்துறை காவலர்கள், காவல்துறை நிலைய எழுத்தர் , ஆய்வாளர்கள் உட்பட பலருக்கு அவர் மாதாமாதம் மாமூல் கொடுத்து வந்தது தெரியவந்தது .

இதில் காவல்துறை அதிகாரிக்கு ஓட்டுனர் காவலர் சிவா, சின்னத்துரை இடமிருந்து பணம் வாங்கிக் கொடுத்ததும் தெரியவந்துள்ளது

இதனை அடுத்து மாவட்ட எஸ்பி அருண் சக்திகுமார் விசாரணை நடத்தி காவலர் சிவாவை கைது செய்ய உத்தரவிட்டார்

இதனடிப்படையில் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அவர் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். மேலும் பல காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.