அதிமுக., மகளிர் அணிச் செயலாளராக கோகுல இந்திரா நியமனம்

சென்னை:

அதிமுக.,வின் மகளிர் அணிச் செயலாளராக சசிகலா புஷ்பாவுக்கு பதிலாக கோகுல இந்திரா நியமிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அதிமுக., பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் இருக்கும் எல்.சசிகலா புஷ்பா எம்.பி., அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருக்கும் எஸ்.கோகுல இந்திரா ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

அ.தி.மு.க. மகளிர் அணி செயலாளர் பொறுப்பில் கைத்தறி மற்றும் ஜவுளித்துறை அமைச்சரும், அ.தி.மு.க. மனுக்கள் பரிசீலனை குழு உறுப்பினருமான எஸ்.கோகுல இந்திரா நியமிக்கப்படுகிறார். தொண்டர்கள் அவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும். – என்று கூறியுள்ளார்.