தலைநகர் டெல்லியில் கடும் பனி மூட்டதால் இயல்பு வாழ்கை பாதிப்பு

 
தலைநகர் டெல்லியில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் காணப்பட்டது. இதனால் சாலை மற்றும் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 110-க்கும் மேற்பட்ட விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
.
வடமாநிலங்களில் தாங்க முடியாத அளவுக்கு குளிர் காணப்படுகிறது. கடந்த சில தினங்களாக வட மாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசியது. குறிப்பாக காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகளில் மைனஸ் டிகிரி செல்சியஸ் குளிர் வாட்டி வதைத்தது.
காற்றில் ஈரப்பதம் மிகுந்து காணப்பட்டதால் தாங்க முடியாத அளவு குளிரினால் மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகினர்.
இன்று அதிகாலை 11 டிகிரி செல்சியஸ் தட்ப வெப்பத்தினால் பனிப்பொழிவு அதிகமாக காணப்பட்டது. 10 மீட்டருக்குள் வருபவர்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு பனி படர்ந்து இருந்தது.
இதனால் டெல்லியில் இன்று போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. டெல்லியில் இருந்து வெளியூர் செல்லும் ரெயில்கள் மற்றும் மெட்ரோ ரெயில், விமான சேவைகள் தாமதமாக தொடங்கின.