பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் பெருமைகளை உணர்த்தி தடையை நீக்கியவர் முதலமைச்சர் ஜெயலிதா : மருத்துவர் சேதுராமன்

 
பிரதமர் மோடிக்கு ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் பெருமைகளை உணர்த்தி தடையை நீக்கியவர் முதலமைச்சர் ஜெயலிதா என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழத்தின் நிறுவன தலைவர் மருத்துவர் சேதுராமன் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.
ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என்பதற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தொடர்ந்து போராடி வந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மருத்துவர் சேதுராமன் அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது :-
தமிழர்களின் வீரத்திற்கு அடையாளமாக சங்ககாலம் தொட்டு தெற்கத்திய சீமைகளில் வீர விளையாட்டாக விளையாடப்பட்டு வந்த ஜல்லிக்கட்டு, எருதுகட்டு போன்ற
நிகழ்ச்சிகளுக்கு ஒன்பது ஆண்டுகளுயக்கு முன்பு சிலரால் தடைவிதிக்கப்பட்டது .
கடந்த ஆண்டு பொங்கல் திருநாளையொட்டி ஜல்லிக்கட்டு நடத்தமுடியாமல் கருப்புதின பொங்கலாக மக்கள் கண்டனத்தை தெரிவித்தார்கள் . இப்போது மத்திய அரசு ஜல்லிகட்டு நடத்த அனுமதி என்கிற தகவல் புத்தாண்டு பொங்கல் பரிசாக தமிழர்களுக்கு கிடைத்து இருக்கிறது.
ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கிடைத்தது என்கிற தகவல் கிடைத்ததும் மதுரை அலங்காநல்லூர்,பாலமேடு,சிவகங்கை சிராவயல், அரளிப்பாறை, மற்றும் புதுக்கோட்டை தேனி மாவட்டங்களில் மக்கள் உற்சாகத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். அந்த தெய்வத் தன்மைக்கு என்றைக்கும் தமிழர்கள் இடையூறு செய்ததில்லை.களைகளை வன விலங்கு பட்டியலில் இருந்து எடுத்து மத்திய அரசு இந்த அனுமதியை வழங்கி இருக்கும் என்று எதிர் பார்கிறோம்.
ஜல்லிக்கட்டு நடத்திட வேண்டும் என்பதற்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாகஅகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தொடர்ந்து போராடி வந்தது. சட்ட விதிமுறைகள் வகுக்க போராடிய ஜல்லிக்கட்டு ஆர்வலகளுக்கு மதுரையில் பாராட்டு விழா நடத்தி சிறப்பு செய்தது எங்களது கழகம்,கடந்த மாதம் 26-12-2015 அன்று கூட எங்களது கழகம் ஜல்லிக்கட்டு நடத்திட மதுரை ஒத்தகடையில் போராட்டம் நடத்தியது .
இப்போது தென் மாவட்ட மக்களின் கோரிக்கை வென்றுள்ளது இதற்காக ஜல்லிக்கட்டு வீர விளையாட்டின் பெருமைகளை பிரதமர் மோடிக்கு கவனத்திற்குகொண்டு சென்று உணர்த்தி தமிழக முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்களுக்கு நன்றிதனையும், பாராட்டுகளையும், தெரிவித்து
கொள்கிறோம்.
மேலும் இந்த அனுமதியை பெற்று தர போராடிய ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு சங்கத்தின் தலைவர் பி. இராஜசேகர், மத்திய அமைச்சர்கள் பொன். இராதா கிருஷ்ணனன், பிரகாஷ் ஜவ்டேகர் ஆகியோருக்கும் தமிழர்களின் சார்பாக நன்றிதனை அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம் தெரிவித்து கொள்வதாக அந்த கழகத்தின் நிறுவன தலைவர் மருத்துவர் சேதுராமன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.