கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்!

சற்றுமுன் சினி நியூஸ் சென்னை
rajini kanth - 2026

சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலைத்திறப்பு நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்கிறார்.

முன்னாள் முதல்வரும், திமுக தலைவராக இருந்தவருமான கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா சிலை அருகில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதியின் சிலைத் திறப்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர்.

இந்த சிலைத் திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்தும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிலைத் திறப்பு விழாவில் பங்கேற்க வருமாறு திமுக சார்பில் ரஜினி, கமல் ஆகியோருக்கு ஏற்கெனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது!

1 thought on “கருணாநிதி சிலைத் திறப்பில் பங்கேற்கிறார் ரஜினி காந்த்!”

  1. ராகுல் காந்திக்கு அதிக பாதுகாப்பு தேவை,ஆல்சோ ரஜினி .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.