பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து விழுந்த மாணவி பலி

Published:

 
திருவாரூரை சேர்ந்த சண்முகப்ரிதா பல்கலைக்கழகத்தின் மாடியில் இருந்து விழுந்ததில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானர்

 

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள விடுதியில் ஏராளமான மாணவ மாணவிகள் தங்கி இருந்து படித்து வருகிறார்கள்.
 
திருவாரூரை சேர்ந்த சண்முகப்ரிதா (19) என்ற மாணவிபி.டெக் 2–ம் ஆண்டு படித்து வந்த இவர் பல்கலைக்கழக விடுதியில் 2–வது மாடியில் அறை எண். 203–ல் தங்கி இருந்தார். இவருடன் மதுமிதா, பிருந்தா, கார்த்திகா என்ற மாணவிகளும் தங்கி உள்ளனர். நேற்று இரவு 10.40 மணி அளவில் சண்முகப்ரிதா தனது அறையை விட்டு வெளியில் வந்து வராண்டாவில் நின்றபடியே கைப்பேசியில் பேசிக்கொண்டு இருந்தார்.
 
அப்போது எதிர்பாராத விதமாக சண்முகப்ரிதா மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடல் சிதறி சம்பவ இடத்திலேயே சண்முகப்ரிதா பரிதாபமாக உயிரிழந்தார்.
 
 
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த கோட்டூர்புரம் காவல் நிலையத்தினர் வழக்குப்பதிவு செய்துமாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 
 
ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Related articles

Recent articles

spot_img