இளம் பெண்களுக்கு இணையம் வழி பயிற்சி அளித்து தற்கொலை படையாக மாற்றும் ஐஎஸ் !

சற்றுமுன்
 
ஐஎஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த மும்பையைச் சேர்ந்த இளம்பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் இணையம் வழி பயிற்சி அளிப்பது தெரிய வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையைச் சேர்ந்த தீவிரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சிலரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.
ஐ.எஸ் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி தற்கொலைப்படை தாக்குதல் நடத்த வீடியோ கான்பரன்சிங் மூலம் மும்பையைச் சேர்ந்த இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருவது தெரியவந்துள்ளது.
அந்த ஆன்லைன் பயிற்சியில் இந்தியாவின் பிற பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களும் கலந்து கொண்டு வருகின்றனர். மேலும் மும்பையைச் சேர்ந்த இளம் பெண்களும் பாக்தாதியின் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கிறார்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.