புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வீடு கட்டித் தருவதாக மோசடி! பாதிரியார் கைது!

Published:

kumari cyclone - 2026

ஓகி புயலின் போது பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட்ட போலி பாதிரியார் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2017 நவம்பரில் இலங்கை, குமரி மாவட்டம், கேரளத்தை பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியது ஓக்கி புயல். இந்தப் புயலால் மீனவர்கள் பலர் வழி தடுமாறி கடலுக்குள் சென்று உயிரிழந்தனர். பலர் வீடுகளை இழந்தனர்.

இந்நிலையில், ஓகி புயலின் போது வீடுகளை இழந்து பாதிக்கப் பட்ட மீனவர்களுக்கு வீடு கட்டித் தருவதாகவும், அதற்காக முன் பணம் கொடுக்கப் பட வேண்டும் என்றும் கூறி நிதி மோசடியில் அவர் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதை அடுத்து, வள்ளவிளை கிராமத்தில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக கேரளாவைச் சேர்ந்த போலி பாதிரியார் ஷிபு எஸ் நாயர் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Related articles

Recent articles

spot_img