நடிகர் சிம்பு மீது புகார் அளிக்கிறது பால் முகவர் சங்கம்!

சற்றுமுன் சினி நியூஸ் சினிமா லைஃப் ஸ்டைல்
simbu - 2026

என் படம் வெளியாகும் நாளில், என் கட்அவுட்களுக்கு அண்டாவில் கொண்டு வந்து பாலபிஷேகம் செய்யுங்க என்று விரக்தியின் விளிம்பில் ரசிகர்களுக்கு அன்புக் கட்டளையிட்ட நடிகர் சிம்புவின் மீது நடவடிக்கை கோரி இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கிறது தமிழ்நாடு பால் முகவர் சங்கம்.

இது குறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி கூறியபோது,

கட்அவுட்களுக்கு அண்டா, அண்டாவாக பாலாபிஷேகம் செய்யுங்கள்” என ரசிகர்களை உசுப்பேற்றி சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசிய நடிகர் சிம்பு மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரியும்,

“வந்தா ராஜாவா வருவேன்” திரைப்படம் வெளியாகும் நாளில் பால் முகவர்களின் கடைகளில் இருந்து பால் திருடு போகாமல் தடுக்க சிறப்பு பாதுகாப்பு அளிக்க கோரியும்…

புதன்கிழமை இன்று காலை 12.30 மணி அளவில் சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்க இருக்கிறோம் என்றார்.

ALSO READ:  ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.