இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவினால் கண்டதும் சுட உத்தரவு!

சற்றுமுன்
 
இந்தியாவின் மேற்கு பகுதியில் பதான்கோட் தாக்குதலைத் தொடர்ந்து அனுமதியின்றி அத்துமீறி பறக்கும் விமானங்களை கண்டதும் சுட்டு வீழ்த்துவதற்கு விமானப்படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமானத்தளத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் கடந்த ஜனவரி 2 ஆம் தேதி அத்துமீறிதாக்குதல் நடத்தினர். இந்த மோதல் சம்பவத்தில் 6 பயங்கரவாதிகளும் 8 பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்தனர்.
குடியரசுதினத்தன்று ராஜஸ்தான் மாநிலத்தில் பறந்த பலூன் ஒன்றும் சுட்டு வீழ்த்தப்பட்டது. சில நாள்களுக்குப் பிறகு மேலும் சில பலூன்கள் பறந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் குறிப்பாக விமானப்படை தளங்களின் மேல அத்துமீறி பறக்கும் விமானங்ககள் மற்றும் ஊடுருவ முயற்சிப்பவர்களையும் கண்டதும் சுடுவதற்கு இந்திய விமானப்படையினருக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.