திமுக.,வை கமல் விமர்சிப்பதா? வெகுண்டெழுந்த காங். தலைவர் கே.எஸ்.அழகிரி!

சற்றுமுன் தமிழகம்
ksalagriri - 2026

அவசியமில்லாமல், தேவையில்லாமல் திமுகவை விமர்சித்த கமல்ஹாசனை வன்மையாக கண்டிக்கிறேன்; எந்த ஒரு அரசியல் கட்சியையும் கூட்டணியில் சேர்ப்பது பற்றி திமுக தலைமையிலான கூட்டணிதான் முடிவு செய்யும்!
– கே.எஸ்.அழகிரி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்!

திமுக., காங்கிரஸ் கூட்டணியில் கமல்ஹாசன் சேர வேண்டும் என்றும் கூட்டணிக்கு அழைப்பு விடுத்து காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பேற்ற கூட்டத்தில் அதன் புதிய தலைவர் கே.எஸ். அழகிரி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு முன்பாகவே, திமுக., குறித்து விமர்சனம் செய்திருந்தார் கமல்ஹாசன். இது குறித்து இப்போதுதான் தன் கவனத்துக்கு வந்ததாக கே.எஸ்.அழகிரி அறிக்கை அளித்துள்ளார்.

இன்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்…

பாஜக, அதிமுக எதிர்ப்பு வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத் தான் கூட்டணியில் சேர கமலுக்கு அழைப்பு விடுத்தேன்! நான் அவ்வாறு கூட்டணிக்கு அழைப்பு விடுக்கும் போது, திமுகவை கமல் விமர்சனம் செய்தது என் கவனத்திற்கு வரவில்லை!

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

கமல் தேவையில்லாமல் திமுகவை விமர்சித்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன் என்று கே.எஸ். அழகிரி அதில் தெரிவித்திருந்தார்.

உண்மையில் கறை படிந்த கைகள்; நான் கை குலுக்கினால் என் கையும் அழுக்காகி விடும். அதனால்தான் தவிக்கிறேன் என்று எல்லோருக்கும் புரியும் படியாகவும், தெரியும் படியகவும் காங்கிரஸையும் சேர்த்தேதான் கமல் விமர்சனம் செய்திருந்தார்!
#KSAlagiri | #KamalHaasan

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.