இந்தியன் 2 படத்தில் நடிக்க விருப்பமா?

Published:

 

IDIAN 2 - 2026

கமல் – ஷங்கர் கூட்டணியில் உருவாகவுள்ள இந்தியன் 2 படத்தின் துணை வேடங்களில் நடிக்க உங்களுக்கு விருப்பமா? எனில், உங்கள் ஆர்வத்தை நிறைவேற்றும் தருணம் வந்துவிட்டது.

1996-ல் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடித்த இந்தியன் படம் மாபெரும் வெற்றியை பெற்றது.

. இந்நிலையில் இப்படத்தின் 2-ம் பாகம் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த படத்தில் கமல், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், வித்யுத் ஜமால், ஐஸ்வர்யா ராஜேஷ், ப்ரியா பவானி சங்கர் போன்றோர் இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்கள். இசை – அனிருத்.

இந்நிலையில் இப்படத்தைத் தயாரிக்கும் லைகா நிறுவனம் ஒரு விளம்பரத்தை வெளியிட்டுள்ளது.

இந்தியன் 2 படத்தில் துணை வேடங்களில் நடிக்க ஆர்வமும் பயிற்சியும் உள்ள நடிகர்கள் தேவை என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.

வயது வித்தியாசமின்று ஆண், பெண் என இரு பாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி பகல் நேர ரயிலை தினசரி ரயிலாக அறிவிக்க கோரிக்கை!

Related articles

Recent articles

spot_img