தங்கத்தின் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. ஒரு கிராம் சுத்தத் தங்கம் விலை நேற்று மாலையுடன் ஒப்பிடுகையில் 6 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 980 ரூபாயாக உள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 5 ரூபாய் அதிகரித்து 2 ஆயிரத்து 786 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 40 ரூபாய் விலை உயர்ந்து 22,288 ரூபாய் ஆக உள்ளது.
Popular Categories



