சர்வதேச மகளிர் தினமான இன்று, நாடாளுமன்றத்தில் பெண் உறுப்பினர்கள் பேச முன்னுரிமை அளிக்கப்பட்டது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசுகையில், நாட்டின் முதல் பெண் பிரதமரை அளித்த பெருமை காங்கிரஸ் கட்சிக்கு உண்டு என்றும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் தான், முதல் பெண் குடியரசுத் தலைவர் மற்றும் மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டதாக கூறினார்.
பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், சமூகத்தில் இன்னும் நிறைய மாற்றம் நடைபெற வேண்டியிருப்பதாக தெரிவித்த சோனியா காந்தி, நாடாளுமன்றத்தில், சட்டப்பேரவையிலும் 33% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் மசோதாவை நிறைவேற்றுவதில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினார்.



