குமரி எல்லைக்குள் விட வைகோ.,வுக்கு போலீஸார் அனுமதி மறுப்பு!

சற்றுமுன் நெல்லை

bjp kumari - 2026

நெல்லை கன்னியாகுமரி மாவட்ட எல்லையில் மோடிக்கு எதிராக கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்த வைகோ சென்றார். மேலும், பிரதமர் மோடி கன்னியாகுமரி வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ முழக்கம் எழுப்பினார்.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் வைகோவை விட போலீஸார் வைகோவுக்கு அனுமதி மறுத்தனர்.

மேலும், வைகோ, மதிமுக., தொண்டர்கள் கன்னியாகுமரிக்குள் நுழைந்தால் நாங்கள் பதிலுக்கு முழக்கம் எழுப்புவோம் என ஆயிரக்கணக்கில் கன்னியாகுமரி மாவட்ட எல்லையான ஆரல்வாய்மொழி பகுதியில் பாஜக., தொண்டர்கள் பெருந்திரளாகக் கூடியிருந்தனர்.

bjp kanyakumar - 2026

அவர்களிடம் போலீஸார் வாக்குவாதம் செய்தனர். கலைந்து போகும் படி கூறினர். ஆனால், வைகோ.,வை மாவட்ட எல்லைக்குள்ளேயே விட மாட்டோம் என பாஜக.,வினர் திரண்டிருந்ததால் காலை முதலே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.