சமீபத்தில் வெளியான ‘அட்ராங்கி ரே’ படத்திலிருந்து வெளியான ‘சக்கா சக்’ பாடலுக்கு புதுமணப்பெண்ணும், அவரது சகோதரியும் நடனமாடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தை கலக்கி வருகிறது
புதுமண பெண்கள் அல்லது தம்பதியர் மண கோலத்தில் நடனமாடும் வீடியோக்கள் பலவும் விரைவில் கவனத்தை ஈர்த்து விடுகிறது.
இதுபோல இணையவாசிகள் சிலர் பாடல்களை தேர்ந்தெடுத்து நடனமாடி அந்த பாடலை பலரும் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது சகோதரிகள் இருவர் ட்ரெண்டிங் பாடலான ‘சக்கா சக்’ பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது. ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘அட்ராங்கி ரே’. இப்படத்தில் சாரா அலிகான் மற்றும் அக்ஷய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் சாரா அலிகான் நடனமாடும் ‘சக்கா சக்’ பாடலுக்கு ஏராளமானோர் ரீல்ஸ் செய்து வருகின்றனர்.
theweddingministry’ என்கிற பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவில், புது மணப்பெண்ணும் அவரது சகோதரியும் ஒரே மாதிரியான லெஹெங்கா உடையை அணிந்துகொண்டு இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர்.
இந்த நடனத்திற்கு அவர்கள் போடும் ஸ்டெப்பும், கொடுக்கும் முகபாவனைகளும் பார்வையாளர்களை அதிகம் கவர்ந்துள்ளது.
தற்போது இந்த சகோதரிகளின் நடன வீடியோ ட்ரெண்டிங் செய்யப்பட்டு வருகிறது. ‘சக்கா சக்’ எனும் இப்பாடலை ஸ்ரேயா கோஷல், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/CYMl1-hNx7q/?utm_source=ig_embed&utm_campaign=loading