வரும் மே 23 ஆம் தேதி அனைத்து கேள்விகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
மே தினத்தையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் கொடியேற்றினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறுகையில், தேமுதிக-ன் கூட்டணி மக்கள் வரவேற்கும் கூட்டணி. மக்களவை தேர்தலில் 40 தொகுதியிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றி பெரும். அதே போல் நான்கு தொகுதியிலும் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிபெறும். என்னுடைய பிரசாரம் 4 தொகுதிகளிலும் இருக்கும் என்று தெரிவித்தார்.



