இலங்கையைப் போல் இந்தியாவிலும் பெண்கள் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
இலங்கையில் இஸ்லாமிய மத பயங்கரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களின் பின்னர், பெண்கள் முகத்தை மூடி அடையாளத்தை மறைத்துக் கொள்ளும் வகையிலான பர்தா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் இதுபோல் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சிவசேனா அமைப்பின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில், கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் இலங்கையின் இந்த முடிவு துணிச்சலானது என புகழ்ந்துள்ள சாம்னா, தேசப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இலங்கையை பின்பற்றி இந்தியாவிலும் பர்தா அணிய தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்ற தாக்குதல்கள் நடத்துவது போல், பர்தா அணிவதை தடை செய்வதும் அவசியம் என்கிறது சிவசேனா!
இலங்கை மட்டுமல்ல, பல்வேறு உலக நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. முகத்தினை மறைத்துக் கொண்டு செல்வது சட்ட விரோதம் என்று சில ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன.
குறிப்பாக, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் இந்த நடைமுறை அமலில் உள்ளது. சீனாவில் பொது இடங்களில் பர்தா அணிந்து செல்லக் கூடாது.
2011ம் வருடம் பிரான்ஸ், தொடர்ந்து டென்மார்க் ஆகியவற்றிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது. டென்மார்க்கில் பொது இடங்களில் குறிப்பாக கார் ஓட்டிச் செல்லும் போது பர்தா அணிந்து செல்வது தடை செய்யப் பட்டுள்ளது. முதல் முறை பிடிபட்டால் எச்சரிக்கையும், மறுமுறை பிடிபட்டால் 157 டாலர் அபராதமும் பின் தொடர்ச்சியாக பிடிபட்டால் அபராதம் 10 மடங்கு அதிகரிக்கவும் செய்யும்.
2018ல் நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகளிலும், பெல்ஜியத்தில் 2011 ஜூலையிலும் தடை விதிக்கப் பட்டுள்ளது.
நார்வே, பல்கேரியா, அல்ஜீரியா உள்ளிட்ட நாடுகளிலும் பர்தா அணிவது தடை செய்யப் பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவிலும் நாட்டின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பர்தா அணிவதை தடை செய்ய வேண்டும் என்று சிவசேனா கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.






பரà¯à®¤à®¾ அணியà¯à®®à¯ பெணà¯à®•ள௠இநà¯à®¤à®¿à®¯à®¾à®µà®¿à®²à¯ வசிகà¯à®•ிறாரà¯à®•ளா இலà¯à®²à¯ˆ, அரப௠நாடà¯à®•ளில௠வசிகà¯à®•ிறாரà¯à®•ளா ?
சிவசேனாவின௠வேணà¯à®Ÿà¯à®•ோள௠ஞாயமானதà¯, பரபடà¯à®šà®®à®±à¯à®±à®¤à¯, மறà¯à®± மததà¯à®¤à®¿à®²à¯ உளà¯à®³ பெணà¯à®•ளைபà¯à®ªà¯‹à®², இவரà¯à®•ளà¯à®®à¯ உடை அணியவேணà¯à®Ÿà¯à®®à¯ எனà¯à®ªà®¤à®¿à®²à¯ எனà¯à®© தவற௠?