December 5, 2025, 7:37 PM
26.7 C
Chennai

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”

“Generation Gap என்கிறார்களே, அது என்ன?”
 
(கேள்வி கேட்டு விளக்கமளித்த பெரியாவாளின்
பதில் உடனிருந்த ஆங்கிலம் மெத்தப்
படித்தவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.)
31389322 1948469448531544 7110905678125858816 n - 2025
 
சொன்னவர்-என்.ராமஸ்வாமி-செகந்தராபாத்.
தொகுத்தவர்-டி.எஸ்.கோதண்டராம சர்மா.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
 
கர்நாடகத்தில் பெல்காம் அருகில் மகா ஸ்வாமிகள்
தங்கியிருந்த சமயம். நான் என் குடும்பத்தாருடன்
தரிசனத்துக்குச் சென்றிருந்தேன்.
 
பெரியவாளை என் தந்தை நமஸ்கரித்தபோது,
 
“இவர்,ஹூப்ளி ராமஸ்வாமியின் தகப்பனார்”
என்று அணுக்கத் தொண்டர் தெரியப்படுத்தினார்.
 
(நான் அப்போது ஹூப்ளி ரயில்வே டிவிஷனில்
அதிகாரியாகப் பணியாற்றிக் கொண்டிருந்ததால்,
‘ஹூப்ளி ராமஸ்வாமி’ என்று ஸ்ரீமடம் பணியாளர்கள் பட்டம் சூட்டியிருந்தார்கள்.!)
 
“உன் பெயர், நாராயணன் தானே?” என்று பெரியவா
கேட்டதும், “ஆமாம்” என்றார், என் தந்தை.
 
பின்னர் நான் நமஸ்காரம் செய்தேன்.அப்போது
அதே தொண்டர், “சாமிநாதனின் (மகன்) அப்பா”
என்று கூறி அறிமுகப்படுத்தினார்.
 
வழக்கமான விசாரணைகள்,கேள்வி-பதில்கள்,
சொந்த ஊர் பற்றிய தகவல்கள்.பத்து நிமிஷமாயிற்று.
 
பெரியவா என்னைப் பார்த்து, ” நீதான் பெரிய லேபர்
ஆபீஸராச்சே? Generation Gap என்கிறார்களே,
அது என்ன?” என்று சற்றுப் புன்முறுவலுடன்
கேட்டார்கள்.
 
நான் ஏதேதோ சொன்னேன். நான் சொல்வது சரியான விளக்கம் இல்லை என்பது எனக்கே புரிந்துதான் இருந்தது. ஒரு வழியாக நான் பேசி முடித்தவுடன்,
 
அந்த மகான் சொன்னார்,
 
“பழைய காலத்தில் ஒருவரை அறிமுகப்படுத்தும்போது – இன்னார் பையன் இவன் என்பார்கள்.பூணூல் போட்டுக் கொண்டிருப்பவர்கள் அபிவாதயே என்று தொடங்கி, தங்கள் கோத்ரம் – ஸூத்ரம் – நாமம் எல்லாம் சொல்லி
அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
 
இப்போ,மாறிடுத்து,பார் – இவர், இன்னாருடைய அப்பா என்று சொல்ற தலைகீழ் நிலை வந்திருக்கு,
 
இதுதான் Generation gap!” என்றார்கள்.
 
உடனிருந்த ஆங்கிலம் மெத்தப் படித்தவர்களையும்
பெரியவாளின் விளக்கம் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories