
தரமற்ற தண்ணீர் அடைக்கப்பட்ட 5000 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
சென்னையில் கோயம்பேடு,கொளத்தூர்,வேளச்சேரியில் கேன் குடிநீர் நிறுவனங்களில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் தரமற்ற தண்ணீர் அடைக்கப்பட்ட 5000 குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேலும், 53 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.



