காதலனைக் கல்யாணம் செய்த ‘பிக்பாஸ்’ வைஷ்ணவி! ‘லிவிங் டு கெதர்’ டூ ‘மேரேஜ் லைஃப்’!

Published:

vaishnavi biggboss - 2026லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்த ‘பிக்பாஸ்’ புகழ் வைஷ்ணவி முறைப்படி தனது காதலரை திருமணம் செய்துகொண்டதாக உலகத்துக்கு அறிவித்திருக்கிறார்!

பிக்பாஸ் சீசன் 2-ல் பலருக்கும் அறிமுகம் இல்லாமல் நிகழ்ச்சிக்கு வந்து பின்னர் பிரபலம் அடைந்தவர்களில் ஆர்.ஜே வைஷ்ணவியும் ஒருவர். அவர் இன்று தனது நீண்ட நாள் காதலரைக் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.

vaishnavi biggboss1 - 2026விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் ஆர்.ஜேவாக இருந்தவர் வைஷ்ணவி! இவர் சென்ற வருடம் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதன் மூலம் பலருக்கும் அறிமுகம் ஆகிவிட்டார். இவர், அஞ்சான் ரவி என்பவரைக் காதலித்து வந்தார். சுமார் 3 வருடங்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், இருவரும் லிவிங் டு கெதர் என சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.vaishnavi biggboss4 - 2026

இந்த நிலையில், தற்போது அவரது நீண்டநாள் காதலரை கல்யாணமும் செய்து கொண்டுள்ளார். மிகவும் எளிமையான திருமணம் மூலம் இருவரும் சேர்ந்துள்ளனர்.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

vaishnavi biggboss2 - 2026இவர் வெள்ளிக்கிழமை நேற்று நண்பர்களை அழைத்து பார்ட்டியும் இன்று காலை திருமணமும் செய்து கொண்டுள்ளனர்.vaishnavi biggboss3 - 2026

இதை தனது இன்ஸ்டாக்ராம், டிவிட்டர் பக்கங்களில் புகைப்படங்களுடன் வெளியிட்டுள்ளார் வைஷ்ணவி. வைஷ்ணவியின் கணவர் அஞ்சான் பைலட்டாக இருக்கிறார்.

Related articles

Recent articles

spot_img