தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறுகிறது.
இந்தாண்டின் முதல் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த ஜனவரி 2ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஜனவரி 2 முதல் 8ம் தேதி வரை நடந்தது. பின்னர் பிப்ரவரி 8ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யபட்டது. பட்ஜெட் மீதான விவாதம் 11 முதல் 14ம் தேதி வரை நடைபெற்று முடிந்த பின்னர் சட்டப்பேரவை தேதி குறிப்பிடமால் ஒத்தி வைக்கப்பட்டது.
சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் குறித்து அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படுகிறது. ஜூன் 28ம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்க உள்ளது.



