சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டது. நேற்று பவுனுக்கு 528 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று பவுனுக்கு 464 ரூபாயாக உயர்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு 1000 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இன்று காலை நிலவரப்படி, ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 26,168 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. இதையடுத்து, 22 கேரட் தங்கம் கிராமுக்கு 58 ரூபாய் உயர்ந்து 3,271 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 3.57 சதவீதம் அதிகரித்து, ஒரு அவுன்ஸ் 1,396.9 டாலருக்கு விற்பனை ஆகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்ததையடுத்து, இந்திய சந்தையிலும் தங்கம் விலை அதிகரித்துள்ளது.



