உலகக்கோப்பை கிரிக்கெட்: இன்று வங்கதேசத்துடன் மோதுகிறது இந்தியா..!

Published:

indian team - 2026

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இன்று வங்கதேச அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் இந்திய அணி அரையிறுதிக்குச் செல்வது உறுதி செய்யப் படும். இந்திய ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கிறது இன்றைய போட்டி!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 12வது உலகக் கோப்பை தொடர் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி தான் விளையாடிய 7 போட்டிகளில் இதுவரை 5 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. 1 போட்டி ரத்தானது. இதனால் இந்திய அணி இதுவரை 11 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ள நிலையில், ஏதாவது ஒரு போட்டியில் வென்றால் கூட இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிடும்.

அது போல், 7 போட்டிகளில் விளையாடி, 3 போட்டியில் வென்று 7 புள்ளிகள் பெற்றுள்ள வங்கதேச அணி, அரையிறுதி செல்வதற்கான வாய்ப்பை தக்க வைக்க இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும்.

ALSO READ:  FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

Related articles

Recent articles

spot_img