Sai pallavi - 2026சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர்  நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானார் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றது.rashmika - 2026இதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சாய் பல்லவி. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தாலும் படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.Dear Comrade - 2026சூர்யா நடிப்பில் வெளியான NGK படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள டியர் காம்ரேட் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியைதான் அணுகினார்கள் என செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என கூறி சாய் பல்லவி அதை நிராகரித்துவிட்டாராம். அதன் பின்னர் தான் ரஷ்மிகா ஹீரோயினாக தேர்வாகியுள்ளார்.

ALSO READ:  சிறுபான்மை தாஜா அரசியல்; அள்ளிவிடும் தவெக., அரசுக்கு இந்து முன்னணி கண்டனம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending