எம்.கே.தியாகராஜ பாகவதர் 110வது பிறந்த நாள்… செங்கோட்டையில் கொண்டாட்டம்!

mkt birthday4 - 2026

செங்கோட்டையில் தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது!

தென்காசி மாவட்டம், செங்கோட்டையை அடுத்துள்ள விசுவநாதபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் வைத்து திருநெல்வேலி, தென்காசி மாவட்ட ஐந்தொழில் கம்மாளர் பேரவை சார்பில் ஏழிசை மன்னர், தென்னிந்தியாவின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 110வது பிறந்த நாள் விழா வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது.

mkt birthday2 - 2026

நிகழ்ச்சிக்கு ஐந்தொழில் கம்மாளர் பேரவை பொருளாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். பேரவைத்தலைவர் மாரிக்கண்ணன், செயலாளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச்செயலாளர் அருணாசலம் அனைவரையும் வரவேற்று பேசினார்.

தொடர்ந்து கோவில வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பேரவைக் கொடியினை மாவட்ட இந்து முன்னனி ஒருங்கிணைப்பாளர் முருகன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

mkt birthday - 2026

பின்னர் அலங்கரிக்கப்பட்ட எம்கே.தியாகராஜபாகவதர் திருவுருவ படத்திற்கு நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். இதில் பேரவை நிர்வாகிகள் கோமதிநாயகம், மயன்சின்னதம்பி, சண்முகம்,பரமசிவம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பேரவை உறுப்பினர்கள் ராஜேஷ்கண்ணன், திவாகர், மேலப்பாவூர்செல்வம், வடகரைகணேசன், தேன்பொத்தைமகேந்திரன், இலத்தூர் மாரியப்பன், இரயகிரிஅரிகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் இலத்தூர் ஐயப்பன் நன்றி கூறினார்.mkt birthday1 - 2026

ALSO READ:  ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோர முகம்!

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தியாகராஜபாகவதருக்கு தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்க உத்தரவிட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, மற்றும் மணிமண்டப பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்க அரசிடம் கோரிக்கை வைப்பது, தமிழக கோவில்களில் சிற்ப பணி மற்றும் பல்வேறு பணிகளுக்கு விஸ்வகர்ம சமுதாய மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தர கேட்டுக்கொள்வது, ஆண்டுதோறும் செப்டம்பர் 17ஆம் தேதி விஸ்வகர்ம ஜெயந்தியாக அறிவித்து தேசிய விடுமுறை தினமாக அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிப்பது.

mkt birthday3 - 2026

அதேபோல் தமிழகத்தலும் செப்டம்பர் 17ஆம் தேதியில் விஸ்வகர்ம ஜெயந்திக்கு தமிழக அரசு விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீரமானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories