அன்று ஆதரவாக ஓட்டு கேட்ட பாதிரியை… இன்று துரத்தி துரத்தி அடிக்கிறார்கள் திமுக., ’புனிதர்கள்’!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்

christian father vellore - 2026

திமுக.,வுக்கு ஓட்டுக் கேட்ட பாதிரியார், இன்று தான் தமிழனாகப் பிறந்ததற்கே வெட்கப் படுகிறேன் வேதனைப் படுகிறேன் என்று கூறியுள்ளார். அதற்கு அவர் கூறிய காரணமும், திமுக.,வினரின் எதிர்வினையும் டிவிட்டர் விடீயோ பதிவுகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

இது குறித்து அந்த பாதிரியார் செய்தியாளர்களிடம் கூறுகிறார்… இந்த தேர்தல் நிற்பதற்கு ஒரே காரணம் பண விநியோகம். அதற்காக நான் தமிழனாக பிறந்ததற்கு வெட்கப்படுகிறேன் வேதனைப்படுகிறேன்!

543 தொகுதிகளில் ஒரே தொகுதியாக பறக்கும் படையினரால் 11.48 கோடிகள் சாக்கு மூட்டைகளில் ஒவ்வொரு தொகுதியின் பெயர் எழுதி தொகுதி வாரியாக எழுதப்பட்டு ஆதாரபூர்வமாக பிடிபட்டது!  அதற்காக இந்த வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது!

ஆனால் இன்று அதே வேட்பாளர் கதிர் ஆனந்த், திமுக சார்பில் மனு கொடுத்திருக்கிறார்! இதை நான் ஒரு தமிழனாக இந்தியனாக பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியாது ! சும்மா இருக்க முடியவில்லை!  ஆகவே தகுந்த ஆதாரத்தோடு சட்ட விதிகளுக்கு உட்பட்டு அந்த மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று தேர்தல் அதிகாரியிடம் முறையீட்டு மனு கொடுத்தேன்

ஆனால் திமுகவினர் என்னை ஒரு போதகர் பேராயர் என்றுகூட நினைக்காமல் டேய் கீழே உட்கார்றா என்று அராஜகத்தை செய்கிறார்கள்! கடைகளில் சென்று சாப்பிட்டு விட்டு பில்லுக்கு பணம் கொடுக்காமல் அடிதடி ரகளை செய்வார்கள் திமுக.,வினர். இன்று அது போல், என்னையும் அதிகாரிகள் முன்பு அதிகார தோரணையில் வாடா போடா என்று எல்லாம் சொல்லி என்னை அவமானப் படுத்துகிறார்கள்… என்று அவர் பேசிக்கொண்டிருந்த போதே சுற்றிலும் நின்று கொண்டிருந்த திமுகவினர் அவரை கத்தி கூப்பாடு போட்டு கூச்சலிட்டு அடக்குமுறையைக் கையாண்டு, அவர் வாயை அடக்குவதற்கு முயன்றார்கள்! சிலர் கையை நீட்டிக் கொண்டு அடிக்கவும் பாய்ந்தார்கள். அதனால்  அந்த இடமே ரணகளமானது!

இது குறித்த டிவிட்டர் பதிவுகளில் ஒன்று…

திமுகவுக்கு ஓட்டுக் கேட்ட பாதிரி இன்று வேலூர் நாடாளுமன்ற தேர்தலில் சுயேச்சையாக நின்ற போது அதே திமுக.,வால் அடிவாங்கிட்டு எப்படி உண்மைகளை போட்டு உடைக்கிறான் பாருங்க.. திருட்டு திராவிட பாதிரிகள்.. – என்று கருத்து தெரிவிக்கிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.