திருநெல்வேலி புறநகர் மாவட்ட செயலாளர் ஆக அறிவிக்கப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கே.ஆர்.பி.பிரபாகரன் ஆரம்பகாலம் தொட்டே தீவிர அதிமுக விசுவாசி ,இவரின் தந்தை கே.ஆர்.பால்துரை கட்சியில் படிப்படியாக வளர்ந்து கீழப்பாவூர் பேரூர் கழக செயலாளர் ,பின்பு ஒன்றிய செயலாளர் ஆக இருந்தவர் தந்தை வழியில் அரசியலுக்கு வந்த கே.ஆர்.பி.பிரபாகரன் வழக்கறிஞராக இருந்தவர் கட்சியில் தீவிர ஈடுபாடு கொண்டவர் முதலில் மாவட்ட மாணவரணி இணைச்செயலாளர் ,பின்பு ஆலங்குளம் தொகுதிக் கழக செயலாளர் ஆக இருந்தவர் அந்த நேரத்தில் தான் இவர் திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினர் ஆக தேர்ந்தெடுக்கப்பட்டார் ,கட்சியிலும் சரி ,பொதுவாழ்விலும் சரி மிஸ்டர் கிளீன் இமேஜ் கொண்டவர் ,கட்சிக்காக தீவிரமாக உழைப்பவர் ,எல்லோரும் எளிதில் அணுகக்கூடிய நபர் இவர் மாவட்ட செயலாளர் ஆனது பலரையும் புருவம் உயர செய்துள்ளது ,கட்சிக்காக உழைத்தால் எந்தப் பதவியும் தேடி வரும் என்பது அதிமுக கட்சியைப் பொறுத்தவரை உண்மைதான்
கீழப்பாவூர் செ.பிரமநாயகம்
இளம்வயதில் மாவட்ட செயலாளர் ஆனார் நெல்லை எம்.பி .பிரபாகரன்
Popular Categories



