கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலல் தெப்பகுளம் புணரமைக்கும் பணி துவங்கியது
தட்சிண அகோபிலம் என்றழைக்கப்படும் கீழப்பாவூரில் சுமார் 1100 ஆண்டுகள் பழமை வாய்ந்த 16 திருக்கரங்கள் கொண்ட அபூர்வ நரசிம்மர் கோவில் தெப்பக்குளம் இந்த தெப்பகுளம் பக்தர்களால் கங்கைக்கு இணையாக போற்றப்பட்டு ஸ்ரீ நரஸிம்ஹ புஷ்கரணி என்றம் அழைக்கப்பட்டு வருகிறது இக்கோவிலில் சுவாதி மற்றும் திருவோண நட்சத்திர நாளான்று தீர்த்தவலம் நடைபெறுவது வழக்கம் இந்த சிறப்பு வாய்ந்த தெப்பகுளம் சிதலமடைந்து உள்ளது தற்போது உபயதாரர்கள் மூலம் குளம் சீரமைக்கும் பணி உபயதாரர்கள் ,பக்தர்கள்,மற்றும் பொதுமக்கள் பங்களிப்போடு துவங்கியுள்ளது ,இப்பணியினை கீழப்பாவூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் கே.ஆர்.பால்துரை துவக்கி வைத்தார் நிகழ்ச்சியில் திருக்கோவில் அறநிலையத்துறை நிர்வாக அதிகாரி கணேசன் ,கணக்கர் ஜெகன்நாதன் , அர்ச்சகர் ஆனந்தன்,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபை நிறுவனர் ஸ்ரீநிவாச வெங்கடாசலம் ,ஒய்வு பெற்ற தாசில்தார் பொன்னுசுவாமி,வெங்கடாசலம்,சந்தோஷ் ,கண்ணன் பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கர் ,அன்புராஜ் ,மற்றும் பொதுமக்கள் ,தன்னார்வ தொண்டர்கள் ,பக்த்தர்கள் கலந்து கொண்டனர் ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறையினரும் ,ஸ்ரீ நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் ,பொதுமக்களும் செய்திருந்தனர் தெப்பக்குளம் புணரமைப்பு பணிக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் ,கோவில் நிர்வாக அதிகாரியை அணுகலாம்



