December 6, 2025, 2:29 AM
26 C
Chennai

தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு

12957391_1335113029837652_1819172567_n

“தலை ஆவணி அவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு.”
 
சொன்னவர்-பி.ராமகிருஷ்ணன்
 
நன்றி-பால ஹனுமான்.&குமுதம் பக்தி ஸ்பெஷல்
.
 
மகா பெரியவாளைப் பற்றி எல்லாருக்கும் தெரிஞ்ச ஒரு விஷயம், அவர் சன்யாச தர்மத்தில் இருந்து ஒரு துளிகூட தவறாம இருந்தவர்ங்கறது.
 
தான் கடைப்பிடிச்ச மாதிரியே எல்லாரும் அவரவர்க்கு உரிய குலதர்மத்தை தவறாம கடைப்பிடிக்கணும்னு எப்போதுமே அவர் சொல்லுவார்.
 
எனக்கு உபநயனம் நடந்து முடிஞ்சதும் நாங்க எல்லாரும் ஆசார்யாள் கிட்ட ஆசி வாங்கிக்கறத்துக்காக காஞ்சிபுரத்துக்குப் போயிருந்தோம். அப்போ, “தலை ஆவணிஅவிட்டம் வரைக்குமாவது உன் பிள்ளையை தினமும் சமிதாதானம் பண்ணச் சொல்லு. ஒவ்வொரு நாளும் மூணு வேளை சந்தியாவந்தனம் பண்றதை எப்போதும் கடைப்பிடிக்கச் சொல்லு. உன்னால முடிஞ்ச சமயத்துல எல்லாம் அவனுக்கு வேத மந்திரங்களைச் சொல்லிக் கொடு!” அப்படீன்னு சொல்லிட்டு என்னை ஆசீர்வதிச்சார்.
 
பரமாச்சார்யார் சொன்ன மாதிரியே எனக்கு வேதங்களை சொல்லித் தர ஆரம்பிச்சார் அப்பா. அந்த சமயத்துல ஒரு நாள் நான் விளையாட்டா சிவலிங்க பூஜை செய்ய ஆரம்பிச்சேன். இதை யாரும் பெரிசா எடுத்துக்கலை.
 
பட்டப் படிப்பை முடிச்சுட்டு மேற்படிப்புக்காக நான் விண்ணப்பிக்க இருந்த சமயம், என்னோட அப்பாவும் அம்மாவும் வழக்கம் போல பரமாச்சாரியா தரிசனத்துக்காக காஞ்சீபுரம் போயிருக்காங்க. வழக்கப்படி ஆசீர்வதிச்ச மகா பெரியவர், மடத்துல இருந்த ஒருத்தரைக் கூப்பிட்டு, ருத்ராட்ச மாலை ஒன்றை எடுத்துக் கொண்டு வரச் சொல்லியிருக்கார்.
 
அவர் கொண்டு வந்த ருத்ராட்ச மாலையை எங்க அப்பா கிட்ட குடுத்து, “உன் மகன் சிவ பூஜை எல்லாம் செய்யறான் போலிருக்கே… அவன் பூஜை பண்ற சமயத்துல இதைப் போட்டுக்கச் சொல்லு!” அப்படீன்னு சொல்லியிருக்கார்.
 
அப்பாவுக்கும், அம்மாவுக்கும் ஒரு பக்கம் ஆனந்தம், மறு பக்கம் ஆச்சரியம்! ‘நம்ப மகன் சிவ பூஜை செய்யறதை நாம பெரிசாவே எடுத்துக்கலை. அதை பெரியவா கிட்ட சொல்லவும் இல்லை. ஆனா, அவராகவே தெரிந்து கொண்டு, ஆசீர்வாதமும் செய்திருக்கார்னா அது எவ்வளவு பெரிய பாக்கியம்!’ இப்படி நினைத்துக் கொண்டே ஆசார்யாள் தந்த ருத்ராட்ச மாலையை மகா பிரசாதமாக நினைத்து எடுத்துக் கொண்டு வந்தவர்களுக்கு இன்னொரு ஆச்சரியம் காத்துக் கொண்டு இருந்தது.
 
அவங்க கையில இருந்த ருத்ராட்ச மாலையைப் பார்த்த மடத்து சிப்பந்தி ஒருத்தர், “அடடே…இது பிரதோஷ காலத்துல பிரத்யேக பூஜை பண்ற சமயத்துல பெரியவா போட்டுக்கற ருத்ராட்ச மாலை ஆச்சே…! இதை உங்களுக்குத் தந்திருக்கார்னா பெரிய பாக்யம் தான்!” னு சொன்னாராம்.
 
அந்த ருத்ராட்ச மாலையை இன்றைக்கும் நான் பொக்கிஷமாக வைத்திருக்கிறேன். தினம்தினம் முறைப்படி பஞ்சாயதன பூஜை பண்ணும்போது அதைப் போட்டுக் கொள்கிறேன்.
 
நான் கேட்காமலே இப்படி ருத்ராட்ச மாலையைத் தந்த மகான், எத்தனையோ தெய்வீக நிகழ்வுகளை நிகழ்த்தியிருக்கிறார்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories