#அத்திவரதர்வைபவம். 3/8/2019 சனிக்கிழமை… நேற்றைய ( 2/8/2019 வெள்ளிக்கிழமை ) அனுபவம்.
நேற்று கூட்டம் கொஞ்சம் கம்மியாக இருந்ததால் வழக்கமான வழியாக வீடு திரும்பும் நேரத்தில் , அண்ணா தெரு வரை எந்த பிரச்சனையும் இல்லை.
அண்ணா தெரு வரும் சமயத்தில் காவலர்கள் வழக்கமாக take diversion என்று சொல்ல, நேற்று நான் உஷாராக அத்திவரதர்வைபவம் resident pass காண்பிக்க, இரு காவலர்கள் என்னை நேராக அனுமதித்தனர்.
அப்போது மைக் வைத்துக்கொண்டு இருந்த பெண்காவலர் இந்த வழியாக செல்லக்கூடாது என்றும் இந்த வழி wheel chair செல்லும் வழி என்று சொன்னதோடு நிற்காமல், இப்படி செல்வது மத்தவங்க சோத்துல மண்ணை போடுவதுக்கு சமம் என்று கூறினார்.
எங்கள் தெருவில் எங்கள் வீட்டுக்கும் அவர்கள் அனுமதித்த பாஸொடு சென்றதற்கு இந்த பதில்.
இன்னும் சொல்லப் போனால் மாடவீதியில் இருக்கும் மக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் எதுவும் கிடைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் தடை. இந்த அழகில் மற்றவர்கள் சோத்துல மண்ணை போடுகிறோமாம்.
அவரிடம் இப்படி சொல்வது சரியா என்று கேட்டதற்கு, அவர் உஷாராக, என்னிடம் இப்படி கேட்காதிர்கள், நாங்கள் எங்கள் அதிகாரிக்கு தான் வேலை செய்கிறோம். உங்களிடம் இல்லை என்று கூறி அவர் மேலதிகாரியிடம் பேச சொன்னார்.
ஆக இவர்கள் யாருக்காக வேலை செய்கிறார்கள் ? நாங்கள் மக்களுக்காக வேலை செய்யலை என்று அவரே சொன்னார். கலக்டர் உத்திரவையும் பின்பற்றவில்லை. அவர்கள் வைத்ததே சட்டம்.
பின் குறிப்பு – அவர்கள் சொன்ன நேரத்தில் அங்கு இரு wheel chair கூட இல்லை. இன்னும் சொல்ல போனால் அங்கு தரிசனம் செய்து வரும் மக்களை நடக்க கூட விடவில்லை
- கேசவ பாஷ்யம்




