21 ஆண்டுகளுக்குப் பின்… பாமக.,வுக்குத் திரும்பிய தீரன்!

சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்

dheeran pmk - 2026

பாமக., முன்னாள் தலைவர் தீரன், மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைந்தார்

பா.ம.க. முன்னாள் தலைவர் தீரன், மருத்துவர் ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் இணைந்துள்ளார். திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் ராமதாஸை அவரது இல்லத்தில் சந்தித்து பா.ம.க.வில் தீரன் சேர்ந்துள்ளார். பாமகவில் இருந்து விலகிய தீரன் 21 ஆண்டுகளுக்கு பின் அக்கட்சியில் மீண்டும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

dheeran pmk1 - 2026இது குறித்து பாமக., வெளியிட்ட செய்திக் குறிப்பில், பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான பேராசிரியர் தீரன் இன்று தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யாவை சந்தித்து பாட்டாளி மக்கள் கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். அவரை மருத்துவர் அய்யா வரவேற்று வாழ்த்தினார்.. .என்று குறிப்பிடப் பட்டிருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.