December 6, 2025, 11:32 PM
25.6 C
Chennai

சூப்பர் ஓவரை சூப்பராக்கிய இந்தியா! தொடரை வென்றது எப்படி பாருங்க!

nz vs ind - 2025

மூன்றாவது டி-20 போட்டியில் அசத்திய இந்திய அணி ‘சூப்பர் ஓவரில்’ சூப்பராக அசத்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ‘டி-20’ தொடரை வென்று சாதித்துள்ளது.

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட ‘டி-20’ தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை பெற்றது. தொடர்ந்து மூன்றாவது போட்டி, ஹாமில்டன் செடான் பார்க் மைதானத்தில் நடந்தது.

3வது போட்டியில் ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் வில்லியம்ஸன், பீல்டிங் தேர்வு செய்தார். இதை அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் இருவரும் நன்கு ரன் எடுத்தனர். ராகுல் 29 ரன்னும், ரோகித் சர்மா 65 ரன்னும் எடுத்தனர். துபேயும் (3), ஸ்ரேயாஸ் (17), கோலி (38) என ரன் எடுக்க, இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 179 ரன் எடுத்தது.

180 ரன்னை விரட்டிய நியூசிலாந்து அணிக்கு குப்டில், மன்ரோ சரியாகக் கைகொடுக்கவில்லை. குப்டில் 31 ரன்னும் மன்ரோ (14) ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். சான்ட்னர் 9 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இருப்பினும் வில்லியம்சன் அதிரடி காட்ட, நியூசிலாந்து அணி வெற்றியை நோக்கி பயணித்தது. கிராண்ட்ஹோம் 5 ரன்னில் ஆட்டமிழந்த போதும், கடைசி ஓவரில் நியூசிலாந்து வெற்றிக்கு 9 ரன் தேவைப்பட்டது. ஷமி வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் சிக்சர் அடித்த ராஸ் டெய்லர், அடுத்த பந்தில் 1 ரன் எடுத்தார். 3வது பந்தில் வில்லியம்சன் (95) ஆட்டம் இழந்தார். 4, 5வது பந்தில் செய்பெர்ட் ஒரு ரன் மட்டும் எடுத்தார். கடைசி பந்தில் ராஸ் டெய்லர் (17) போல்டாக. நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன் எடுத்தது. இரு அணிகளும் ஒரே ரன் எடுத்ததால், போட்டி சமனில் முடிந்தது.

இதை அடுத்து ‘சூப்பர்’ ஓவர் விளையாடப் பட்டது. முதலில் நியூசிலாந்து களம் இறங்கியது. இந்தியா சார்பில் பும்ரா பந்து வீசினார். நியூசிலாந்து தரப்பில் வில்லியம்சன், குப்டில் களமிறங்கினர். வில்லியம்சன் தலா ஒரு சிக்சர், பவுண்டரி அடிக்க, நியூசிலாந்து அணி சூப்பர் ஓவரில் 17 ரன் எடுத்தது.

18 ரன் எடுத்தால் வெற்றி என்று களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் சர்மா, ராகுல் இணை, நிதானமாக எதிர்கொண்டது. முதல் 2 பந்தில் ரோகித் 3 ரன் எடுத்தார். 3வது பந்தில் ராகுல் பவுண்டரி அடித்தார். 4வது பந்தில் ஒரு ரன் எடுக்கப்பட, கடைசி 2 பந்தில் 10 ரன் தேவைப்பட்டது! அப்போது ஆட்டத்தின் திருப்பு முனையாக, 5,6 ஆவது பந்தில் ரோகித் சிக்சர்களை அடித்து, ரசிகர்களை உற்சாகத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்றார். இதனால் இந்தியா ‘சூப்பர்’ ஓவரில் சூப்பர் வெற்றி பெற்று, நியூசிலாந்து மண்ணில் முதன் முறையாக ‘டி-20’ தொடரையும் வென்று அசத்தியது.

இது குறித்து கூறிய இந்திய கேப்டன் கோலி, ஆட்டத்தின் போக்கு கைவிட்டுப் போய்விட்டது என்று நினைத்த நேரத்தில் சரியான திசையில் வெற்றி வசப்பட்டது என்றார். இந்தப் போட்டியின் மூலம் தொடக்க வீரராகக் களம் இறங்கி ரோஹித் சர்மா 10 ஆயிரம் ரன் கடந்த வீரர் ஆனார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories