November 8, 2024, 7:55 PM
28.3 C
Chennai

PENGUIN – பெண்குயின் – பணிப்பெண் – விமர்சனம்!

penguin
penguin

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் , கார்த்திக் சுப்புராஜ் வெளியிட , புதுமுக இயக்குனர் ஈஸ்வர்  கார்த்திக் இயக்கத்தில் அமேசான் ப்ரைமில் நேரடியாக வந்திருக்கும் வந்திருக்கும் படம் பெண்குயின். ஹீரோயின் ஓரியண்டட் படமென்பதால் தமிழில் பென்குயின் என்று வைக்காமல் பெண்குயின் என வைத்திருக்கிறார்கள்…

ஆறு வருடங்கள் முன் தொலைந்து போன தனது மகனை நம்பிக்கை இழக்காமல் தேடிக் கண்டுபிடிக்கும் ஒரு கர்ப்பிணிப் பெண் ரிதத்தின் ( கீர்த்தி சுரேஷ் ) கதையே பெண்குயின். மகனை கண்டுபிடித்த  ரிதம் மகனை கடத்தியவனை கண்டுபிடித்தாரா ? என்பதை ஒரு விதமாக சொல்லி முடிக்கிறது படம் …

சில படங்களில் ஹீரோயினாக வந்து போயிருந்தாலும் ஒரு நடிகையாக தனது திறமையை கீர்த்தி சுரேஷ் வெளிப்படுத்திய முதல் படம் நடிகையர் திலகம் . அதன் பிறகு அவரை முழமையாக நம்பி எடுக்கப்பட்டிருக்கும் பெண்குயினில் குறை வைக்காமல் குயினாகவே கடைசி வரை படத்தை தோள்களில்  சுமக்கிறார் . ஆனால் அதுக்காக கர்ப்பிணிப்பெண் உடம்பை பார்த்துக்கொள்ளாமல் சூப்பர் வுமன் போல சாகசம் செய்வதெல்லாம் ஓவர். கீர்த்தி நடிப்பு மட்டும் போதுமென்பது போல மற்ற நடிகர்கள் யாரும் பெரிதாக சோபிக்காமல் போனது துரதிருஷ்டமே ….

ALSO READ:  பாவார்ப்பணம்: குரு மாங்குடி துரைராஜ ஐயருக்கு கலை வடிவில் அஞ்சலி!
penguin
penguin

கீர்த்தியின் முன்னாள் , இன்னாள் கணவன்களாக இருவர் வருகிறாரகள் . விஜயசாந்தி பட ஹீரோக்கள் கூட எவ்வளவோ தேவலாம் . முன்னவர் ஓவர் ஆக்டிங்க் செய்தால் பின்னவர் நடிப்புன்னா கிலோ என்ன விலைன்னு கேட்பார் போல . அதிலும் அவரை ஆடியன்ஸ் சந்தேகப்படும் படியாக வைக்கப்பட்ட சில சீன்களில் மிக்ஸர் சாப்பிட்டுக் கொணடிருக்கிறார் மாதம்பட்டி ரங்கராஜ் 

கீர்த்தி சுரேஷ் நடிப்பு ,  கொடைக்கானல் லொக்கேஷன் , அதை கண்ணுக்கு குளிர்ச்சியாக காட்டிய  கார்த்திக் பழனி யின் ஒளிப்பதிவு, படத்தின் ட்ரைலர் , இரண்டு ப்ளாட்களை இணைத்த விதம் மற்றும் ஆரம்ப காடசிகள் இவையெல்லாமே படத்துக்கு ப்ளஸ் . சந்தோஷ் நாராயணனுக்கு சம்பள பாக்கியோ என்னவோ ?!!

தொலைந்த மகனை தேடும் கர்ப்பிணித்தாயை மையமாக வைத்து ஒரு சீரியல் கில்லர் கதையை யோசித்த இயக்குனருக்கு பாராட்டுக்கள் . ஆனால் அது மடடும் போதுமா ? கிட்னாப் என்றொரு ஆங்கிலப் படததில் ஆறு வயது மகனை தன் கண் முன்னால் கடத்தியவிடமிருந்து காப்பாற்றும் தாயின் கதையை அவ்வளவு விறுவிறுப்பாக எடுத்திருப்பார்கள் . இதில் அது டோட்டலி  மிஸ்ஸிங் . படம் சைலனஸ் ஆஃப் த லேம்ப் , Dr.ஹனிபல் , ஃபாரன்ஸிக் போன்ற படங்களை நினைவுபடுத்துவது சறுக்கல்…

ALSO READ:  தபால் துறையில் 344 பணியிடங்கள்; வேலைவாய்ப்பு தவறவிட்டுடாதீங்க!

பொதுவாக பழைய தமிழ் படங்களில்  போலீஸ் கடைசியாக வருவார்கள் ஆனால் இதில் முதலிலேயே வந்து கடைசிவரை ஒன்றுமே செய்யவில்லை .

அதிலும் க்ரைம் சீனிற்குள் போய் கீர்த்தி எவிடன்ஸை எடுப்பதை கூடவா ஒரு இன்ஸபெக்டர் தடுக்காமலிருப்பார் ? எந்த வித சடலமும் கிடைக்காமல் எப்படி கீர்த்தியின் மகன்  இறந்து விட்டதாக அவர் சொல்கிறார் ? கடைசியில் கீர்த்தியின் நாய் தான் கில்லரை கண்டுபிடிக்கிறது. போலீஸ் தரப்பில் தேட ஒரு நாயை கூட கண்ணில் காட்டவில்லை . ஒரு நாய்க்கு தான் பிஸ்கட் போட பட்ஜெட் இருந்ததோ ?!

கீர்த்தி சுரேஷ் – கார்த்திக் சுப்புராஜ் காம்போவில் ஒரு திரில்லர் , அட்டகாசமான ட்ரைலர் இதெல்லாம் படத்துக்கு ஒரு பெப்பை கொடுத்தன . ஆனால் அதை படம் நெடுக இயக்குனர் கொடுக்காமல் பிட்ஸ் அண்ட் பார்ஸலாக  கொடுத்ததால் குயினாக இருந்திருக்க  வேண்டிய பெண் வெறும் பணிப்பெண்ணாகிப் போனாள் …

ரேட்டிங்க்  : 2.5 * / 5 *
ஸ்கோர் கார்ட் : 39 .

இந்த படத்தின் ரிவியூவை யூ டியூபில் பார்க்க கீழே சொடுக்கவும்

  • விமர்சனம்: ‘வாங்க ப்ளாக்கலாம்’ அனந்து
ALSO READ:  கோகுலாஷ்டமியும் கிருஷ்ண ஜயந்தியும்!

author avatar
தினசரி செய்திகள்
Dhinasari Tamil News Web Portal Admin

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரண வழிபாடு!

பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயில் கந்தசஷ்டி தேரோட்டம்; பக்தர்கள் கும்பிடு சரணம் வழிபாடு!

ரூ.1 லட்சம் சம்பளத்தில் மின் பகிர்மான கழகத்தில் வேலை!

ஆர்வமுள்ளவர்கள் www.powergrid.in என்ற இணையதளம் ஆன்லைன் மூலம் வரும் 6 ஆம் தேதிக்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

பஞ்சாங்கம் நவ.08 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை