
நவராத்திரி ஸ்பெஷல்… ஆன்மீக கேள்வி பதில் – 10
தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்
கேள்வி: வாராஹி தேவியின் சிறப்பு என்ன?
பதில்: சப்தமாதர்களில் ஐந்தாவது மாதா வாராகி தேவி. அதனால் பஞ்சமி தேவியாக அறியப்படுகிறாள். அதோடுகூட லலிதா உபாசனையில் வாராஹி தேவிக்கு மிகவும் முக்கியத்துவம் உள்ளது.
‘கிரிசக்ர ரதா ரூடா தண்டநாதா புரஸ்க்ருதா’ என்பது லலிதா நாமம். கிரி சக்கரம் என்றால் வராஹங்களால் ஆன யந்த்ரம்.
வராஹ ரூபிணீ சக்தியாக ஆதி வராஹ ரூபம் கொண்டாள் ஜெகதாம்பாள்.
வாராகி அம்மன் ‘ அன்னப் பிரதாயக சக்தி’. ப்ருத்வியைத் தாங்குபவள். அதாவது பூமியில் போஷக சக்தியாக விளங்கி சர்வ ஜகத்திற்கும் உணவளிப்பவள். ‘தண்டநாதா’ என்று கூறப்படுவதால் இவள் ரக்ஷணை சக்தியும் கூட. உணவும் பாதுகாப்பும் அளிக்கும் இரு சொரூபங்கள் வாராகி தேவி உபாசனையில் காணப்படுகின்றன.
வாராஹி உபாசனையால் நமக்கு உணவு குறைவின்றி கிடைக்கிறது. பாதுகாப்பும் கிடைக்கிறது.
லலிதா தேவி பண்டாசுர வதம் புரிந்த போது தேவியின் சேனைகளுக்கு தலைமை தாங்கியவள் வாராகி அம்மன்.