
திருவாவடுதுறை: திருவாவடுதுறை அருகே திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரசுவாமி கோயிலில் நவராத்திரி வழிபாடு சிறப்பாக நடந்தது.
திருமங்கலக்குடியில் திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான ஸ்ரீ மங்களாம்பிகை சமேத ஸ்ரீ பிராணநாதேஸ்வரசுவாமி கோயில் உள்ளது
இக்கோயிலில் ஆண்டுதோறும் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடக்கும் அதன்படி நடந்த வழிபாட்டில் திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கோயிலில் உள்ள பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை ஆகிய தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து அம்பாளுக்கு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்து தீபாரதனை நடந்தது. இதில் பக்தர்கள் சமுக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
